மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு-மஹிந்த பாராட்டு!

4 view
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவை பாராட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று(20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களாலேயே தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். நெருக்கடியை உருவாக்குவதற்கு பங்களித்தவர்கள் நிரபராதிகளாகி தற்போதைய அரசாங்கத்தின் மீது சகல பழிகளையும் சுமத்துவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கௌரவ பிரதமரிடம் சுட்டிக்காட்டினர். மக்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலையை தீர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளர் திரு. அனுர திஸாநாயக்க மற்றும் பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம், பொதுஜன…
The post மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு-மஹிந்த பாராட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース