போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது..!
1 view
போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றையதினம் வடமராட்சி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் படி இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் 4 லட்சம் ரூபா பெறுமதியான Pregabalin எனப்படும் 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. குறித்த இளைஞர் கரணவாய் பகுதியைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
The post போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
