பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த ஓட்டோ-மூவர் வைத்தியசாலையில் நுவரெலியாவில் விபத்து !
2 view
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி பள்ளத்தில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் நுவரெலியா புஸ்ஸல்லாவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புஸ்ஸல்லாவ – பேரட்டாசி பகுதியிலிருந்து கம்போலா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டியின் பிரேக் செயலிழந்ததால் அது பள்ளத்தில் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் சாரதி உட்பட மூவர் காயமடைந்து புஸ்ஸல்லாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த ஓட்டோ-மூவர் வைத்தியசாலையில் நுவரெலியாவில் விபத்து ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த ஓட்டோ-மூவர் வைத்தியசாலையில் நுவரெலியாவில் விபத்து ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
