கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நிறைவுக்கு வந்த தவக்கால ஆன்மிக எழுச்சித் திருப்பயணம்
9 view
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணம் நேற்றுடன்(12) முடிவடைந்தது. கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை தலைமையில் கடந்த 40 நாட்களாக இந்நிகழ்வு நடைபெற்றுவந்த நிலையில் யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளாரின் நன்றி திருப்பலியுடன் நேற்றுடன் இனிதே நிறைவுபெற்றது. 40 நாட்களாக நடைபெற்ற எழுச்சித் திருப்பயணத்தில் அருட்தந்தையர்கள் பக்தர்களின் வீடுகளுக்கு சென்று போதித்ததுடன் அவர்களை நல்வழிப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.
The post கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நிறைவுக்கு வந்த தவக்கால ஆன்மிக எழுச்சித் திருப்பயணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நிறைவுக்கு வந்த தவக்கால ஆன்மிக எழுச்சித் திருப்பயணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.