வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் சங்காபிஷேகம்
11 view
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் சங்காபிஷேகம் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இவ்வாலய வருடாந்த அலங்கார பூசை கடந்த 2ம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றையதினம் ஆலய பிரதமகுரு முத்து ஜெயந்தி நாதக்குருக்களினால் சங்காபிஷேக பூசை இடம்பெற்றிருந்தது. இதேவேளை ஐயனார் அடியார்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் முகமாக குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஐயனார் ஆலயத்திற்கு காவடி மற்றும் பாற்செம்பு எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் சங்காபிஷேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் சங்காபிஷேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.