முக்கிய பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தாய்லாந்து பெண்
12 view
சுமார் 5 கிலோ கிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 33 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவராவார், இவர் இன்று அதிகாலை மலேசியாவில் இருந்து இலங்கை வந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
The post முக்கிய பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தாய்லாந்து பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முக்கிய பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தாய்லாந்து பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.