அவிசாவளையில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
10 view
அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் இரண்டு பயணிகள் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அவிசாவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுரும்பிட்டிய பகுதியில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இரு பஸ்களின் சாரதிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளதாக அவிசாவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தற்சமயம் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post அவிசாவளையில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அவிசாவளையில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
