யாழ்.தெரிவத்தாட்சி அலுவலருடன் தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு..!
10 view
தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபனை இன்று(08) யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில், தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாகவும், எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளார் எஸ்.அச்சுதனும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
The post யாழ்.தெரிவத்தாட்சி அலுவலருடன் தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.தெரிவத்தாட்சி அலுவலருடன் தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
