தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்!
7 view
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டமொன்று நடத்துவதற்குத் தீர்மானிக்ப்பட்டுள்ளது. குறித்த பொதுக் கூட்டமானது பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் வெஸ்ற்றேனில் மாலை 05.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளா் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் கௌரவ நீதியரசரரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், சிரேஷ்ட சட்டத்தரணி வி. புவிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
