கிளிநொச்சியில் கண்காட்சி!
7 view
சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் கண்காட்சியொன்று இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி, பசுமைப் பூங்காவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இதன்போது, பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனையும் செய்யப்பட்டன. இந்நிகழ்வில், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், உற்பத்தியாளர்கள், நிறுவன பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post கிளிநொச்சியில் கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
