பாராளுமன்ற ஆசனம் வெற்றிடம்- தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு..!
12 view
இரத்தினபுரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி முதல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக ஒன்பதாவது பாராளுமன்றத்தில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) பிரிவின்படி இந்த அறிவித்தல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post பாராளுமன்ற ஆசனம் வெற்றிடம்- தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற ஆசனம் வெற்றிடம்- தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
