கிளிநொச்சியில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு!
11 view
கிளிநொச்சியில் இன்று காலை தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் உட்பட அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள். காலை 10.15 மணியிலிருந்து மதியம்வரை இச்சந்திப்பு இடம் பெற்றது. சந்திப்பின் முடிவில் மக்கள் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது. பொதுமக்கள் கேள்விகளை கேட்டார்கள். கேள்விகளுக்கு தமிழ் மக்கள் பொதுச்சபை பிரதிநிதிகளால் விளக்கம் தரப்பட்டது.
The post கிளிநொச்சியில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
