மாணிக்க கங்கையில் நீராடிய நபர் முதலைக்கு இரை..!
7 view
மாணிக்க கங்கையின் பாலத்திற்கு அருகாமையில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் முதலைக்கு இரையாகியுள்ளார். நேற்றைய தினம் காலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலைக்கு இரையான நபரின் சடலம் பொலிஸார் மற்றும் வனஜீவிகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சுமார் 30 முதல் 35 வயது வரையிலான நபர் ஒருவரே இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
The post மாணிக்க கங்கையில் நீராடிய நபர் முதலைக்கு இரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணிக்க கங்கையில் நீராடிய நபர் முதலைக்கு இரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
