லயன் குடியிருப்பில் திடீர் தீப்பரவல்; இருவர் சாவு – அதிகாலையில் பதற்றம்
6 view
எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தானது இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதன்போது லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த 60 வயதுடைய ஆணும் 50 வயதுடைய பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 03 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post லயன் குடியிருப்பில் திடீர் தீப்பரவல்; இருவர் சாவு – அதிகாலையில் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லயன் குடியிருப்பில் திடீர் தீப்பரவல்; இருவர் சாவு – அதிகாலையில் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
