அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானம்
9 view
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் இரு போகங்களுக்கும் உரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க 55,000 மெட்ரிக் டன் உரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. உர விநியோகம் போன்ற நடவடிக்கைகளுக்காக சுமார் ஒன்றரை பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அத்தொகையை அரசாங்கம் ஏற்க நடவடிக்கை எடுக்குமெனவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
The post அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
