ஜெய்சங்கரைச் சந்திக்கமாட்டார் சம்பந்தன் – திடீர் சுகவீனமே காரணம்!
10 view
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இதன் போது வடக்கு – கிழக்கு நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. இன்று காலை திடீரெனச் சுகவீனமடைந்துள்ளமையால் மாலை நடைபெறும் மேற்படி சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜெய்சங்கரைச் சந்திக்கமாட்டார் சம்பந்தன் – திடீர் சுகவீனமே காரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜெய்சங்கரைச் சந்திக்கமாட்டார் சம்பந்தன் – திடீர் சுகவீனமே காரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
