34 வது தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு!
9 view
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 34வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தேக்கவைத்தையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ,சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா,ம.தியாகராஜா, கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post 34 வது தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 34 வது தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
