மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு
10 view
முந்தல – பரலங்காட்டுவ பிரதேசத்தில் உள்ள தனது கால்நடைப் பண்ணையில் மின்சார திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வர்த்தகரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவிக்கின்றனர். கம்பஹா – இம்புல்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட மொனர பிடிகும்புரமுல்லையைச் சேர்ந்த சனத் குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று 20ஆம் திகதி மாலை குறித்த நபர் தான் சொந்தமாக நடத்தி வரும் கால்நடைப் பண்ணையின் கதவை சரி செய்துகொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
