காவல்துறையினரால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவன்…?
5 view
குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில், ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி காவல்துறையினர் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார். மேலும், முச்சக்கர வண்டி ஓட்டியவர் அடிக்கவில்லை. மற்றவர்களே என்னை தாக்கினர். தற்போது அதற்காக சிகிச்சை பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
The post காவல்துறையினரால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவன்…? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காவல்துறையினரால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவன்…? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
