குருநாகலில் கோர விபத்து – உயிரியல் பாட ஆசிரியர் பரிதாபச் சாவு!
12 view
வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குருநாகல், வாரியப்பொல பிரதேசத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 34 வயதுடைய உயிரியல் பாட ஆசிரியரே உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். வாரியப்பொல பாடசாலையொன்றில் கடமைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியரே விபத்தில் சிக்கியுள்ளார். காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post குருநாகலில் கோர விபத்து – உயிரியல் பாட ஆசிரியர் பரிதாபச் சாவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருநாகலில் கோர விபத்து – உயிரியல் பாட ஆசிரியர் பரிதாபச் சாவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
