அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது – ஆனந்தசங்கரி
14 view
75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இனப் பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். அன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியையும் முன்வைத்தனர். அவ்வாறாக போர் நிலவிய நேரத்தில் சம்மந்தனும் திருட்டு தனமாக நாடாளுமன்றம் சென்ற 22 பேரும் மக்களிடம் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு பிரசாரம் செய்தனர். இதனால் ரணில் தோற்றார். அவர்களை நம்பி மக்களும் வாக்களித்தனர். சமஷ்டியை செல்லா காசாக்கினார்கள். அன்று சமஷ்டி வேண்டாம் என்று பிரசாரம் செய்த அரசியல் தலைவர்கள், இன்று நானா நீயா என்று போட்டி போடுகிறார்கள். 2004…
The post அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது – ஆனந்தசங்கரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது – ஆனந்தசங்கரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
