இடமாற்றம் குறித்து யாழ்.அரச அதிபர் வெளியிட்ட தகவல்
6 view
யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு இடமாற்றம் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் தொலைபேசி மூலம் வினவிய போது, தனக்கு எழுத்து மூலமாக இடமாற்றம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார் எனினும் இந்த வருடத்தோடு ஓய்வு பெறுபவர்களின் இடங்களுக்கு புதிதாக நியமிக்கப்படவேண்டியவர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படுகின்றது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதில் எனது பெயரும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறதே தவிர எனக்கு இடமாற்றம் தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என – என்றார்.
The post இடமாற்றம் குறித்து யாழ்.அரச அதிபர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இடமாற்றம் குறித்து யாழ்.அரச அதிபர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
