உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை! எத்தனையாவது இடம் தெரியுமா?
19 view
உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவுப் பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது. கடந்த முறை இலங்கை ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தது. உலக வங்கியின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடாக 321 சதவீததுடன் சிம்பாப்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதேவேளை லெபனான் மற்றும் வெனிசுலா மாநிலங்கள் அந்த பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.
The post உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை! எத்தனையாவது இடம் தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை! எத்தனையாவது இடம் தெரியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
