இலங்கையில் கேக் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
6 view
முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாரிய முட்டை உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிக விலைக்கு முட்டைகளை கொள்வனவு செய்து கேக் போன்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
The post இலங்கையில் கேக் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் கேக் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
