காதலியின் அந்தரங்க வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞன் – காதலியிடம் காசும் பறிப்பு
7 view
வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்துகொண்ட படத்தைக் காட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி, அவரது அந்தரங்க படங்களை எடுத்து வைத்து, அதனை காட்டி பணம் பறித்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வீடியோக்களை காதலன் தனது நண்பர்களுக்கும் பகிந்ததாகவும்,குறித்த பெண் பொலிஸில் வழங்கிய முறைபாட்டை மீள பெறுமாறு அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
The post காதலியின் அந்தரங்க வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞன் – காதலியிடம் காசும் பறிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதலியின் அந்தரங்க வீடியோக்களை நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞன் – காதலியிடம் காசும் பறிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
