மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு..!
15 view
முட்டையை 55 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், வர்த்தகர்களிடம் கோரியுள்ளது. உற்பத்திச் செலவுகளுக்கு அமைய, வெள்ளை முட்டை 49 ரூபா சிவப்பு முட்டை 50 ரூபா என்ற விலை எல்லையை வழங்குமாறு கோரியதாக அந்த சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ், எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். அதாவது, தற்காலிகமாக 55 ரூபா என்ற விலை எல்லையை வழங்குமாறு கோருகின்றோம். உற்பத்தி கிடைக்கும்போது, எதிர்காலத்தில் இந்த விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்தார். இதேவேளை, முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், அது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன டி சில்வா மற்றும் பேமா சுவர்ணாதிபதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…
The post மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
