திருமலையில் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி!
7 view
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் தொடர்பிலான சந்தை மற்றும் கண்காட்சி என்பன இடம்பெற்றன. குறித்த நிகழ்வானது இன்று (15) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க முள்ளிப்பொத்தானை சந்தை கட்டிடத்தொகுதிக்கு அருகாமையில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது . இதில் உள்ளூர் உற்பத்திகளான கைப்பணி பொருட்கள்,பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் என பலதும் இதன் போது சந்தைப்படுத்தப்பட்டன. உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இக் கண்காட்சியும் சந்தைப்படுத்தலும் இடம் பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் உடகெதர உட்பட பிரதேச சபை செயலாளர்,பிரதேச செயலக சிறு தொழில் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post திருமலையில் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
