அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
6 view
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் தீபமேற்றப்பட்டு அன்ரன் பாலசிங்கத்தின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
