வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!
14 view
வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் இன்று (13.12) அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்விசார் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். அந்தவகையில் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினைச் சேர்ந்த கல்விசார் ஊழியர்களும் அதற்கு ஆதரவாக அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.அநீதியான அரசாங்கத்தின் அசாதாரணமான வரி விதிப்புக்கொள்கை மற்றும் மக்களை அழுத்தத்திற்குள்ளாக்கும் வரவுசெலவு திட்டத்தை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளினை முன்வைத்தே இந்த பண்பகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளது.இதன்காரணமாக வவுனியா பல்கலைக்கழகத்தில் எந்த விதமான கல்வி நடவடிக்கைகளும் இடம்பெறாது என வவுனியா பலகலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ்.திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.
The post வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
