ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி மருத்துவமனையில் அனுமதி
6 view
உடல்நல பாதிப்பிற்குள்ளான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வேளை ரிக்கிபொன்டிங்கிற்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரிக்கிபொன்டிங்கிற்கு இருதய பாதிப்பு ஏற்பட்டது என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. 40 நிமிடங்கள் வர்ணணையாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த ரிக்கி பொன்டிங் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறினார். அவரை மற்றுமொரு முன்னாள் வீரர்ஜஸ்டின் லாங்கர் காரில் ஏற்றி அனுப்பியுள்ளார். அதன் பின்னர் ரிக்கிபொன்டிங் மருத்துவமனையிலிருந்து திரும்பவில்லை. எனினும் மருத்துவமனையில் தான் நல்லநிலையில் உள்ளதாக ரிக்கிபொன்டிங் தனது சகாக்களிடம் தெரிவித்துள்ளார். ரிக்கிபொன்டிங் குணமடையவேண்டும் என பிரார்த்திக்கின்றோம் என மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.
The post ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி மருத்துவமனையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி மருத்துவமனையில் அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
