இலங்கையை போன்ற கடன் தரவரிசைக்கு கானா!
6 view
மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, கானா நாட்டை, ஆழமான தரமிறக்கலுக்கு உட்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஏற்கனவே வங்குரோத்து நிலையிலுள்ள இலங்கையை போன்ற கடன் தரவரிசைக்கு அந்த நாடு உள்ளாகியுள்ளதாக மூடிஸ் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட கடன் மறுசீரமைப்பின்போது தனியார் கடன் வழங்குநர்கள் இழப்பைச் சந்திக்கும் சாத்தியக்கூறுகள் காரணமாகவே கானாவை மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை தரமிறக்கியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி, கானா நாட்டின் கடன் மதிப்பீடு, இரண்டு நிலைகளால் குறைக்கப்பட்டுள்ளது. இது மூடிஸின் இரண்டாவது மிகக் குறைந்த மதிப்பெண் ஆகும். அது கானாவை இலங்கைக்கு இணையாக கொண்டு வந்துள்ளது.
The post இலங்கையை போன்ற கடன் தரவரிசைக்கு கானா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை போன்ற கடன் தரவரிசைக்கு கானா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
