வீசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

6 view
இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான வீசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வீசாக்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளது. அதன்படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை பெறும் 22 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 500 டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது. குடியுரிமையின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைனில் மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கட்டணம் 50 டொலராகவும் வணிகங்களுக்கு 55 டொலராகவும் திருத்தப்பட்டுள்ளது. இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணையை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான வீசா வழங்குவதற்கான கட்டணம் 150 டொலராக இருக்கும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
The post வீசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース