நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
7 view
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் புதன்கிழமை(30) தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் 3 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 2 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 6 உறுப்பினர்களும், அகில இலங்கை…
The post நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
