இந்தியா அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடருக்கான நியூஸிலாந்து அணியில் கப்டில்- போல்ட்டுக்கு ஓய்வு!
37 view
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான, நியூஸிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் முன்னணி வீரர்களான துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் மற்றும் வேகபந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. 30 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இரு அணிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார். காயம் காரணமாக கைல் ஜேமிசன் மற்றும் பென் சியர்ஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதேசமயம் ஜிம்மி நீஷம் சொந்த காரணங்களுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக இறுதி போட்டியில் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்குவார். கேன் வில்லியம்சன் தலைமையிலான ரி-20 அணியில், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லொக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, பிளேர் டிக்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.…
The post இந்தியா அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடருக்கான நியூஸிலாந்து அணியில் கப்டில்- போல்ட்டுக்கு ஓய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடருக்கான நியூஸிலாந்து அணியில் கப்டில்- போல்ட்டுக்கு ஓய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
