பிரான்ஸில் தரையிறங்கிய கப்பல் அகதிகளை 11 ஜரோப்பிய நாடுகள் பகிர்ந்து ஏற்பு!
14 view
“ஓஷன் வைக்கிங் ” கப்பலில் இருந்த 230 அகதிகளும் பிரான்ஸின் தூலோன் (Toulon) கடற்படைத் துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களை அங்கு நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள் உட்பட மனிதாபிமானப் பணியாளர்கள் ஒன்று கூடி வரவேற்றனர். ஆண்கள் பெண்கள் மற்றும் 57 சிறுவர்கள் அடங்கிய இந்த அகதிகள் லிபியாவை அண்டிய கடற்பகுதியில் மீட்கப்பட்டவர்களாவர். எரித்திரியா, சிரியா, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலி, சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்கியுள்ளனர். இந்த அகதிகள் கப்பலை ஏற்பதற்கு இத்தாலி மறுத்துவந்ததைத் தொடர்ந்து மக்ரோன் அரசு கப்பலை பிரான்ஸின் துறைமுகத்துக்குள் வர விசேட அனுமதி வழங்கியது. கப்பலில் வந்த அகதிகள் பெரும் மகிழ்ச்சி பொங்கத் தரையிறங்கினர். அவர்கள் அனைவருமே புகலிடம் கோர விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்துக் குடியேறிகள் தொடர்பான கடப்பாட்டுக்கு அமைய பதினொரு ஐரோப்பிய நாடுகள் அகதிகளில் 175 பேரைப் பகிர்ந்து ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ளன என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் “ஐரோப்பாவின் ஐக்கியம் நிரூபிக்கப்பட்டுள்ளது”…
The post பிரான்ஸில் தரையிறங்கிய கப்பல் அகதிகளை 11 ஜரோப்பிய நாடுகள் பகிர்ந்து ஏற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரான்ஸில் தரையிறங்கிய கப்பல் அகதிகளை 11 ஜரோப்பிய நாடுகள் பகிர்ந்து ஏற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
