அடுத்த மாதம் விஜய் இரசிகர்களுக்கு இசைத் திருவிழா!
43 view
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின், இசை வெளியிட்டு விழாவை பல கோடி இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அவர்களை மகிழ்விக்கும் வகையில் மகிழ்ச்சியான செய்தியொன்று தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் டிசம்பர் 24ஆம் திகதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. கடந்த 5ஆம் திகதி வாரிசு விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடலின் வைப்பே இன்னமும் இரசிகர்கள் மத்தியில் குறையாத நிலையில், இந்த அறிவிப்பு விஜய்யின் இரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
The post அடுத்த மாதம் விஜய் இரசிகர்களுக்கு இசைத் திருவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த மாதம் விஜய் இரசிகர்களுக்கு இசைத் திருவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
