யாழில் கள்ள உறுதி தயாரித்து காணி விற்பனை – சட்டத்தரணி உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
25 view
போலியான காணி ஆவணம் தயாரித்த சந்தேகநபர்களை தேடி யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் கடந்த ஒருவாரகாலமாக வலைவீசி வந்தனர். இதன்போது சட்டத்தரணி மற்றும் யாழ்ப்பாண பிரபல பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபர் உட்பட ஒன்பது பேரினை பொலிஸார் கைது செய்திருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிவான் நளினி சுபகரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கானது விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி ஜனாதிபதி சட்டத்தரணி, சிரேஷ்ட சட்டத்தரணிகள் உட்பட 25 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர். இதன்போது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 2022.11.21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
The post யாழில் கள்ள உறுதி தயாரித்து காணி விற்பனை – சட்டத்தரணி உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கள்ள உறுதி தயாரித்து காணி விற்பனை – சட்டத்தரணி உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
