சுற்றுலா பயணிகளின் வசதிகளை அதிகரிக்க துறைமுகம், விமான நிலையம் தயார் நிலையில்!
15 view
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிகளை அதிகரிக்க துறைமுகம் மற்றும் விமான நிலையம் தயாராக உள்ளன என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் வழங்கிய தகவலின் படி அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த உண்மைகளை கவனத்தில் கொண்டு துறைமுகம் மற்றும் விமான நிலையத்தின் வசதிகளை அதிகரிக்குமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த திட்டமிட்ட முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக துறைமுகம், விமான நிலையம், சுங்க மற்றும் குடிவரவு முகாமை அதிகாரிகளுடன் அமைச்சர் இன்றைய தினம் (11ஆம் திகதி) அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதுடன், அதன் பின்னர் துறைமுகத்தில் கள ஆய்வொன்றிலும் ஈடுபட்டார். இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு…
The post சுற்றுலா பயணிகளின் வசதிகளை அதிகரிக்க துறைமுகம், விமான நிலையம் தயார் நிலையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலா பயணிகளின் வசதிகளை அதிகரிக்க துறைமுகம், விமான நிலையம் தயார் நிலையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
