யாழில் திடீர் திடீரென அமைக்கப்படும் சோதனைச் சாவடிகள் : வெளியான காரணம்!
15 view
மாவீரர் நினைவேந்தல் வாரம் நெருங்கும் வேளையில் யாழ்.மாவட்டத்தின் பிரதான வீதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் இராணுவச் சோதனைச் சாவடிகள் தமிழ் மக்களின் நீடித்த நினைவுகளைத் துடைக்கும் உளவியல் சித்திரவதையாகவே அமையும். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலை தடுக்கும் நோக்கில் பிரதான வீதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமளிக்கிறது. பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அன்றாட வாழ்வில் தவிக்கும் மக்களின் இன்னல்களுக்கு இந்த நடவடிக்கை போதாது என்றே தோன்றுகிறது. யாழ்ப்பாணம் உட்பட தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவச் சோதனைச் சாவடிகள் நீண்டகாலமாக தேவையற்ற துன்புறுத்தல்கள், உளவியல் ரீதியாக அச்சுறுத்தல் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பொறிமுறையாகவே இருந்து வருகின்றது என்பது அனுபவ உண்மை. இந்தப் பின்னணியில் இராணுவச் சோதனைச் சாவடிகளை வடமாகாண ஆளுநர் ஏன் பரிந்துரைத்துள்ளார் என்பது புதிராகவே…
The post யாழில் திடீர் திடீரென அமைக்கப்படும் சோதனைச் சாவடிகள் : வெளியான காரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் திடீர் திடீரென அமைக்கப்படும் சோதனைச் சாவடிகள் : வெளியான காரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
