இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிப்பு!
6 view
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் தலைவர், தூதுவர் ஃபெடரிகோ வில்லேகாஸ் (Federico Villegas), நியூயோர்க்கில் நடைபெற்ற 77வது பொதுச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்தார். சமீப ஆண்டுகளில், மனித உரிமைகள் பேரவை அதன் அதிகரித்து வரும் பணியின் அளவு மற்றும் அதை ஆதரிக்கும் துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட வளங்களுக்கு இடையே, அதிகரித்து வரும் இடைவெளியின் விளைவாக நிறுவன சவால்களை எதிர்கொள்கிறது என்று வில்லேகாஸ் இதன்போது தெரிவித்தார். அதன் ஐம்பத்தொன்றாவது அமர்வில், “மனித உரிமைகள் பேரவைக்கு பொருத்தமான ஆதரவு” என்ற தலைப்பில் 51/101 தீர்மானத்தை சபை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார். மேலும் இலங்கை மீதான பிரேரணையை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 2022 செப்டெம்பர் 12…
The post இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
