100 மி.மீ. அளவான பலத்த மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு – மக்களே அவதானம்!
6 view
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளனர்.
The post 100 மி.மீ. அளவான பலத்த மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு – மக்களே அவதானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 100 மி.மீ. அளவான பலத்த மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு – மக்களே அவதானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
