அரசியல் தீர்வுடன் சேர்த்தேதான் பொருளாதாரத் தீர்வும் சாத்தியம்! – தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு சம்பந்தன் விளக்கம்
6 view
“நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று கிட்டினால் மட்டுமே அதனோடு சேர்ந்து பொருளாதாரத் தீர்வும் சாத்தியமாகும்.” – இவ்வாறு தம்மைச் சந்தித்த தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சில தமிழ் கனேடிய முதலீட்டாளர்கள் அந்த நாட்டின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சம்பந்தனைச் சந்தித்து உரையாடினர். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் பங்குபற்றினர். இலங்கையில் தமிழ் கனேடிய புலம்பெயர் மக்கள் முதலீடு செய்ய எடுத்த முடிவை சம்பந்தன் பாராட்டி, வரவேற்றார். ”நாட்டுக்கும் தமிழர் தேசத்துக்கும் முதலீடுகள் அவசியம். ஆகவே இந்த முதலீடுகள் தமிழர் தாயகத்துக்கும் வரப் பிரசாதம்தான். இதன் மூலம் எமது தமிழர் தாயகத்துக்கும் விருத்தியும், எமது மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும். ஆனாலும்,…
The post அரசியல் தீர்வுடன் சேர்த்தேதான் பொருளாதாரத் தீர்வும் சாத்தியம்! – தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு சம்பந்தன் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் தீர்வுடன் சேர்த்தேதான் பொருளாதாரத் தீர்வும் சாத்தியம்! – தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு சம்பந்தன் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
