ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று மகாராஷ்டிராவில்!
11 view
ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இன்று இரவு நுழைகிறது. அவரது 61-வது நாள் பாதயாத்திரை தெலுங்கானாவில் இன்று நடந்தது. ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று இரவு 7 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டம் தொகுதியில் நுழைகிறது. இரவில் அவரது பாத யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. மகாராஷ்டிராவில் நாளை காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறது. வருகிற 20-ந்தேதி வரை அவர் மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். 14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார். மகாராஷ்டிரா பாத யாத்திரையின் போது ராகுல் காந்தி 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதல் பொதுக்கூட்டம் எதிட்வரும் 10ஆம் திகதி நான்டெட் மாவட்டத்திலும், 2-வது பொதுக்கூட்டம் 18ஆம் திகதி புல்தானா மாவட்டம்…
The post ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று மகாராஷ்டிராவில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று மகாராஷ்டிராவில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
