இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவடைந்தது

6 view
இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. நாட்டில் புதிதாக 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி பாதிப்பு எண்ணிக்கை 830ஆக பதிவாகியிருந்த நிலையில், அதற்குப் பின்னர் கடந்த 11 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்திருந்தது. நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 132ஆக பதிவாகியிருந்த நிலையில், 11 நாட்களுக்கு பின்னர் தினசரி பாதிப்பு இன்று மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு 4 கோடியே 46 இலட்சத்து 61 ஆயிரத்து 516 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று டெல்லி மற்றும் ஒடிசாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 இலட்சத்து 30 ஆயிரத்து 509 ஆக உயர்வடைந்துள்ளது. இதேநேரம், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஆயிரத்து 252…
The post இந்தியாவில் 11 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவடைந்தது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース