கால்வாய்களை புனரமைக்க QR முறைக்கு வெளியே எரிபொருளை வழங்க தீர்மானம்!
6 view
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் வகையில், கால்வாய்களை உடனடியாக சுத்தப்படுத்துவதற்கு QR முறைக்கு வெளியே எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. களனி ஆற்றின் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று (3) இலங்கை மகாவலி அதிகாரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இதனைத் தெரிவித்தார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த நீர் வடிந்தோடக்கூடிய வகையில் நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் விவசாய சேவைகள் திணைக்களம் உட்பட ஏனைய அரச நிறுவனங்களும் இணைந்து அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் காலத்தில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக சுமார் ஐந்து…
The post கால்வாய்களை புனரமைக்க QR முறைக்கு வெளியே எரிபொருளை வழங்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கால்வாய்களை புனரமைக்க QR முறைக்கு வெளியே எரிபொருளை வழங்க தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
