அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் – சாணக்கியன்!
7 view
அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாமல், நேற்றைய தினம் வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப்பதாகவும், குறிப்பாக வாகரையினை முற்றாக அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுவதாகவும் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக முன்வைத்துள்ளார். குறிப்பாக வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் காணிகளை வழங்கும் திட்டங்களில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதேபோன்று சேதனப்பசளை என்ற பெயரில் ஊழல் மோசடிகள்…
The post அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் – சாணக்கியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் – சாணக்கியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
