யாழ்ப்பாண இளைஞர்களுக்கான அவரச அறிவிப்பு
16 view
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில், இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரத்த வங்கி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையின் பின் புறமாக அமைந்துள்ள 12ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக, இரத்த வங்கிக்கு தினமும் காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரையில் நேரில் சமூகம் அளித்து குருதி கொடை வழங்கலாம். இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பு செய்ய விரும்புவோரும் 0772105375 மற்றும் 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற செய்திகள்
The post யாழ்ப்பாண இளைஞர்களுக்கான அவரச அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாண இளைஞர்களுக்கான அவரச அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
