பேஸ்புக் விளம்பரத்தால் பணத்தை பறிகொடுத்த இளைஞன்!
19 view
பேஸ்புக் மூலம் அறியப்பட்ட ஒருவரிடமிருந்து 10,000 கனேடிய டொலர்களை கொள்வனவு செய்யச் சென்ற தனியார் வங்கி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 2.7 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். களனி, வனவாசல, பொசோன் வத்த பகுதியில் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10,000 கனேடிய டொலர்களை மாற்றுவது தொடர்பாக ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்ட விளம்பரத்தை பார்த்த வங்கி ஊழியர், அவரை தொடர்பு கொண்டுள்ளார். ஒரு கனேடிய டொலரை ரூ.275 வீதம் மாற்ற தயாராக இருப்பதாக அந்த நபர் கூறியுள்ளார். நாட்டில் கனேடிய டொலர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், குறைந்த விலையில் கிடைக்கும் கனேடிய டொலரை மாற்ற விரும்பியதாக வங்கி ஊழியர் பேலியகொட பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த நபர் வசிக்கும் களனி, வனவாசல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வங்கி ஊழியரும் அவரது தந்தையும் சென்றுள்ளனர். எனினும், அவ்விடத்திற்கு வந்த இருவர்,…
The post பேஸ்புக் விளம்பரத்தால் பணத்தை பறிகொடுத்த இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேஸ்புக் விளம்பரத்தால் பணத்தை பறிகொடுத்த இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
