பரிஸ் மாஸ்டர்ஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி!
16 view
ஆண்களுக்கான பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபேல் நடால், அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபேல் நடால், அமெரிக்காவின் டொமி போலை எதிர்கொண்டார். இப்போட்டியில், ரபேல் நடால், 6-3, 6-7, 1-6 என்ற செட் கணக்குகளில், டொமி போலிடம் தோல்வியை தழுவினார். இதேபோல மற்றொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ்வை வீழ்த்தி ஸ்பெயினின் பாப்லோ கரேனோ புஸ்டா வெற்றிபெற்றார்.
The post பரிஸ் மாஸ்டர்ஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரிஸ் மாஸ்டர்ஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
