நோயுற்ற பெற்றோர்; கருவுற்ற மனைவி – நெரிசலில் பலியான இலங்கை இளைஞனின் துயரக் கதை!
12 view
இலங்கையின் கண்டிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஜினத் (Jinath) தனது தோளில் பெரும் குடும்பச் சுமையுடனையே தென்கொரியாவுக்கு வந்திருக்கிறான். பாத்திமாவுடன் (Fatima) எட்டு வருடக் காதல். பெற்றோரின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் கடந்த ஜுலையில்தான் திருமணம், கருவுற்ற நிலையில் மனைவி. புற்றுநோய் பாதித்த தாயார், நீரிழிவு நோயாளியான தந்தை இப்படியான குடும்பப் பின்புலம் அவனை வருமானம் தேடி வெளிநாட்டுக்கு விரட்டியது. ஜினத் சியோலுக்கு வந்து தொழில் தொடங்கியதும் மனைவி பாத்திமாவை அங்குள்ள பல்கலைக் கழகம் ஒன்றுக்கு அழைத்துப் படிப்பிப்பதற்கான முயற்சிகளைத் தொடக்கியிருந்தான். தாயின் புற்றுநோயைக் குணப்படுத்துவதும் வீடு ஒன்றைக் கட்டுவதும் அவனது கனவாக இருந்தது. ஆனால் அவை அனைத்துமே அந்தக் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாகக் கலைந்து போயின. ஜினத்தின் நண்பர்களும் கூடத் தொழில் புரிகின்றவர்களும் இந்தத் தகவல்களை எல்லாம் “கொரியா ஹெரால்ட்” செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றனர். ஜினத்தைப் போலன்றி உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காகச் சியோல் நகருக்குச்…
The post நோயுற்ற பெற்றோர்; கருவுற்ற மனைவி – நெரிசலில் பலியான இலங்கை இளைஞனின் துயரக் கதை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நோயுற்ற பெற்றோர்; கருவுற்ற மனைவி – நெரிசலில் பலியான இலங்கை இளைஞனின் துயரக் கதை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
